சோழவந்தானில் மைசூரு எக்ஸ்பிரஸ் திடீரென்று நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
சோழவந்தானில் மைசூரு எக்ஸ்பிரஸ் திடீரென்று நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோழவந்தான்,
தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் சோழவந்தான் ரெயில் நிலையம் வந்தது. சோழவந்தானில் பயணிகளை இறக்கிய பின்னர் புறப்பட்ட மைசூரு எக்ஸ்பிரஸ் திடீரென்று நிறுத்தப்பட்டது. ஏ.சி. பெட்டியில் இருந்து கருகிய வாடை வந்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர். ரெயிலை விட்டு பயணிகளும் கீழே இறங்கி பதற்றத்துடன் காணப்பட்டார்கள். உடனே ரெயில்வே பணியாளர்களும், போலீசாரும் சம்பந்தப்பட்ட ரெயில்ெபட்டியில் ஆய்வு நடத்திய போது மின்வயரில் எலி சிக்கியதால் கருகிய வாடை ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ரெயில்வே பணியாளர்கள் எலியை அப்புறப்படுத்தி மின்வயரை சரி செய்தனர். அதன் பின்னரே பயணிகள் மீண்டும் ரெயிலில் ஏறினார்கள். அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. சமீபத்தில் மதுரையில் ரெயில் பெட்டியில் சிலிண்டர் வெடித்து 9 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் பீதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.சி. பெட்டிகளில் எலி தொந்தரவு இருக்கிறதா? என்பதை ரெயில்வே பணியாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.