மோட்டார் சைக்கிள் திருட்டு
சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் மகன் வெங்கடேசன்(வயது 27). இவர் சம்பவத்தன்று பாவளத்தில் உள்ள தனது மாமியார் வீட்டின் வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இரவு அங்கேயே தங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
பின்னர் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இரவு நேரம் அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாாின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.