மாமல்லபுரம் கடற்கரையில் மணலில் மோட்டார் சைக்கிள் சவாரி - சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு

மாமல்லபுரம் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்குக்காக 1 கி.மீ. தூரத்திற்கு மணலில் சவாரி செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் மோட்டார் சைக்கிள் சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-23 08:57 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு பொழுதை கழிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இங்குள்ள கடற்கரைக்கு சுற்றுலா வரும் வாலிபர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் பொழுதுபோக்குக்காக மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு அருகில் கடற்கரை மணலில் 1 கி.மீ. தூரத்திற்கு அதிக திறன் கொண்ட நான்கு சக்கரம் கொண்ட மோட்டார் சைக்கிள் சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

கடற்கரை மணலில் அதிவேகத்தில் சீறி செல்லக்கூடிய வகையில் பிரத்தியேகமாக வடிக்கப்பட்ட 4 டயர்களுடன், 2 நபர்கள் அமர்ந்து பயணிக்கும் வகையில் இருக்கைகளுடன், மோட்டார் சைக்கிள் போன்று முன்புறம் இரு கைப்பிடிகளுடன் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் நபர் ஒருவர் கடற்கரை மணலில் ஒரு ரவுண்டு (1 கி.மீ. தூரம்) ஓட்டி செல்ல ரூ.300-ம் இரண்டு ரவுண்டு ஓட்டி செல்ல ரூ.500-ம் ஒரே நேரத்தில் 2 நபர்கள் அமர்ந்து பயணிக்க ரூ.500-ம் 2 நபர்கள்2 ரவுண்டு (2 கி.மீ. தூரம்) ஓட்டி செல்ல ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்