கிருஷ்ணகிரியில்மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.58.83 கோடி கடன் உதவிஅமைச்சர் காந்தி வழங்கினார்

Update: 2022-12-29 18:45 GMT

கிருஷ்ணகிரியில் மகளிர் சுய உதவிக்களுக்கு ரூ.58 கோடியே 83 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.

கடன் உதவி

கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி 806 மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 9,812 பயனாளிகளுக்கு ரூ.58 கோடியே 83 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பொருளாதாரத்தில் முன்னேற்றம்

தற்போது வரை ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் 7,128 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் 78 ஆயிரத்து 441 மகளிர் உறுப்பினர்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெறுகின்றனர்.2022-2023-ம் ஆண்டுகளில் 7,813 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், தற்போது வரை 7,504 குழுக்களுக்கு ரூ.433.40 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜாகீர் உசேன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், நகர செயலாளர் நவாப், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், தாட்கோ மேலாளர் யுவராஜ், உதவி திட்ட அலுவலர்கள் பெருமாள், பிரபாகர், சந்தோசம், இளங்கோ, ராஜீவ்காந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கதிரவன், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்