பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம் நடந்தது.

Update: 2023-08-01 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் ஆடி ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது. நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி விரதம் இருந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் என்பில்டு காலனியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடங்கள் சுமந்து கொண்டு ஊர்வலமாக வேட்டையன்பட்டி வழியாக காரைக்குடி சாலை வந்து அடைந்தனர். அங்கிருந்து ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் பூத்தட்டு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(புதன்கிழமை) திருவிளக்கு பூஜை, முளைப்பாரி எடுப்பு விழா நடக்கிறது. ஆடிப்பெருக்கன்று அன்னதானமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆடி விழா குழுவினர் மற்றும் விஸ்வகர்மா கைவினைஞர்கள் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்