தர்மபுரியில்தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்கள் கருத்துகேட்பு கூட்டம்

Update: 2023-05-10 19:00 GMT

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கும் கருத்துகேட்பு கூட்டம் தர்மபுரி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை கட்டிட வளாககத்தில் நடைபெற்றது. மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ், தர்மபுரி தொழிலாளர் உதவி ஆணையர் முத்து, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் ஜெய்சங்கர் மற்றும் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் ஆகிய அலுவலர்கள், தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறை, மூலப்பொருட்கள் விலை ஏற்றம் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஆகியவை குறித்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் களஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்