தர்மபுரி நகராட்சி கூட்டம்ஆணையாளரிடம் தி.மு.க. கவுன்சிலர் வாக்குவாதத்தால் பரபரப்பு

Update: 2023-09-29 19:00 GMT

தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் வரவேற்று பேசினார். தர்மபுரியில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், நவீன பயணிகள் நிழற்குடை அமைத்தல், பழுதடைந்த பாதாள சாக்கடை இணைப்புகள் சரி செய்தல், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட 34 பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் சம்பந்தம், மாதேஸ்வரன், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ராஜாத்தி, முன்னா, செந்தில்வேல் ஆகியோர் தங்களது வார்டுகளில் சாக்கரை கால்வாய் தூர்வாருதல், தெருவிளக்கு, சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றுவது குறித்து பேசினர். அப்போது 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முருகவேல் இருக்கையில் இருந்து எழுந்து வந்து நகராட்சி ஆணையாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனது வார்டுக்கு இதுவரை எந்த பணி செய்துள்ளீர்கள்? நகராட்சி அதிகாரிகள் யாராவது வந்து எனது வார்டை ஆய்வு செய்தார்களா? என பல்வேறு கேள்விகளை கேட்டு விவாதம் செய்தார். இதனால் நகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்