மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-10-10 00:15 IST

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ரேஷ்மா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரளா முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட தலைவர் ரவீந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் அறிவித்த மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1000 அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும், பணி நேரம் வரையறை செய்ய வேண்டும், காலதாமதம் இல்லாமல் ஊதியம் வழங்க வேண்டும், கவுரவமான பணிச்சூழலை ஏற்படுத்த வேண்டும், பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியத்துடன் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி மருத்துவத் திட்ட ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதியை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்