394 பயனாளிகளுக்கு ரூ.8 கோடி கடன் வழங்க நடவடிக்கை

முத்ரா கடன் மேளாவில் 394 பயனாளிகளிடமிருந்து ரூ.8 கோடியே 37 லட்சம் கடன் வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-05-25 19:58 GMT

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த முத்ரா கடன் மேளாவில் 394 பயனாளிகளிடமிருந்து ரூ.8 கோடியே 37 லட்சம் கடன் வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடன் மேளா

முன்னேறத்துடிக்கும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் தொழில் முனைவோருக்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டு 11 பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களிலும் முத்ரா கடன் மேளா நடைபெற்றது.

கடந்த நிதி ஆண்டில் மாவட்டத்தில் ரூ. 400 கோடி வரை இத்திட்டத்தின் கீழ் கடன்வழங்கப்பட்டுள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை எவ்வித பிணையமும் இல்லாமல் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 26 வங்கிகளின் 272 வங்கி கிளை அலுவலர்கள் நேற்று நடந்த முத்ரா கடன் மேளாவில் கலந்து கொண்டனர்.

விண்ணப்பம்

இதில் அதிகமாக பெண்களும் மகளிர் சுய உதவிக்குழுவினரும் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பப்பட்ட வங்கியை தேர்வு செய்து கடன் பெற விண்ணப்பம் அளித்தனர். மேலும் இது தொடர்பாக தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் உடனடியாக அதிகாரிகளிடம் கேட்டு விளக்கம் பெற்று கொண்டனர்.

நேற்று நடந்த இந்த லோன்மேளாவில் 394 பயனாளிகளிடமிருந்து ரூ.8 கோடியே 37 லட்சம் கடன் வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பயனாளிகளுக்கு இந்தக்கடன் தொகை வழங்கப்படும் என வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்