மயிலாடுதுறை மீனவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்

இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட மயிலாடுதுறை மீனவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மீனவ பஞ்சாயத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-01 18:45 GMT


இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட மயிலாடுதுறை மீனவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மீனவ பஞ்சாயத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலெக்டரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன், பாலசுப்ரமணியன், அருண்குமார், மாதவன், கார்த்திக், முருகன் ஆகிய 6 மீனவரும் கடந்த மாதம் 23-ம் தேதி அதிகாலை கோடியக்கரை கிழக்கே மீன்பிடித்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக படகை நங்கூரமிட்டுவிட்டு உறங்கியுள்ளனர்.

அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர் தரங்கம்பாடி மீனவர்களை கொடூரமான முறையில் தாக்கி, மீனவர்களின் படகில் இருந்த என்ஜின், மீன்பிடி சாதனங்கள், ஜி.பி.ஆர்.எஸ் கருவி போன்றவற்றை எடுத்து சென்றுவிட்டனர்.

இழப்பீடு- நிவாரணம்

இதில் காயமடைந்த மீனவர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த மீனவர்கள் உடமைகள் இழந்ததோடு அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதித்து வேதனையில் உள்ளனர். எனவே காயமடைந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்