காதல் திருமணம் செய்த ஆசிரியை மாயம்

காதல் திருமணம் செய்த ஆசிரியை மாயமானார்.

Update: 2023-05-21 20:00 GMT

துறையூர்:

காதல் திருமணம்

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த கோம்பைபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

அந்த பெண், ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருவதாகவும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண் மாயமானதாகவும் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இது குறித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் புஷ்பராஜ் புகார் அளித்தார். அதில், தனது மனைவிக்கு, ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததாகவும், அவர் அந்த வாலிபருடன் சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்