மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குஜிலியம்பாறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய குழு உறுப்பினர் தம்பிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திண்டுக்கல்- கரூர் பைபாஸ் ரோடு வழியாக குஜிலியம்பாறை வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் ஓட்டை, உடைசலாக உள்ளன. மழைக்காலங்களில் பஸ்சின் உள்ளே மழை நீர் புகுகிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே புதிய பஸ்களை விடவேண்டும் என்று கோஷமிட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.