தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-07-18 19:22 GMT

தமிழ்நாடு திருநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் சிலைகளுக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தியாகி சங்கரலிங்கனார் 1956-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கினார். 76 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனார் உடல்நலம் நலிவுற்ற நிலையில் ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் உடல்நிலை கருதி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டினர். ஆனால் சங்கரலிங்கனார் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்த் தியாகம் செய்தார். தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனார் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு திருநாளான நேற்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து பலர் மரியாதை செலுத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்