கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.9½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.9½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
கடத்தூர்
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இதற்கு 5 ஆயிரத்து 600 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. இதில் கதலி (கிலோ) ரூ.33-க்கும், நேந்திரன் ரூ.30-க்கும் ஏலம் போனது.
பூவன் (தார்) ரூ.250-க்கும், தேன்வாழை ரூ.460-க்கும், செவ்வாழை ரூ.570-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும், ரொபஸ்டா ரூ.310-க்கும், மொந்தன் ரூ.230-க்கும், ரஸ்தாளி ரூ.430-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.9 லட்சத்து 60 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 6 ஆயிரத்து 500 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இதில் தேங்காய் ஒன்று 9 ரூபாய் முதல் 17 ரூபாய் 10 காசு வரை என மொத்தம் 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.