வேன் மோதி கடற்படை வீரர் படுகாயம்
வேன் மோதி கடற்படை வீரர் படுகாயம் அடைந்தார்.
ராமேசுவரம்,
இமாச்சல் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோக் லிமன் (வயது 43). ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை முகாமில் பணிபுரிந்து வரும் இவர் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். நேற்று காலை ராமேசுவரம்-மெய்யம்புளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த ஆம்னி வேன் ஒன்று அவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் கடற்படை வீரர் அசோக் லிமன் படுகாயம் அடைந்தார். அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து தங்கச்சிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி வேன் டிரைவர் மதுரை கீழத்துரை பகுதியை சேர்ந்த பாலாஜியை(41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.