மாரியம்மன் கோவில் திருவிழா

போச்சம்பள்ளி அருகே மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.;

Update:2023-01-19 00:15 IST

மத்தூர்

போச்சம்பள்ளி அருகே தோலம்பதி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. நேற்று பக்தர்கள் கரகம் எடுத்து கங்கையில் பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறப்பட்டது. பின்னர் வேடப்பட்டி மாரியம்மன், வேடியப்பன் சாமி ஊர்வலத்துடன் மாவிளக்கு எடுத்தலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி எருது விடும் நிகழ்ச்சி நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்