சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்

தர்மபுரி குள்ளனூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.;

Update:2022-09-18 00:15 IST

தர்மபுரி குள்ளனூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சக்தி கரகம் அழைத்தல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றன. தொடர்ந்து பொங்கல் வைத்தல் மற்றும் கூழ் ஊற்றும் விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பனந்தோப்பு கொட்டாய், நாகர்கோவில் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் கோவிலை வந்து அடைந்ததும் அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்