மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா
தர்மபுரி உழவர் தெருவில் மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா நடந்தது.;
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை உழவர் தெரு மகா மாரியம்மன் கோவில் 29-வது ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை மாரியம்மன் திருவீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.