ஒலிம்பிக் ஜோதி மாரத்தான் ஓட்டம்

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, ஒலிம்பிக் ஜோதியுடன் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-07-26 17:13 GMT
44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, ஒலிம்பிக் ஜோதியுடன் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒலிம்பிக் ஜோதியுடன் கூடிய மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சி நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் இருந்து தொடங்கிய நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இதையொட்டி அவர் மாவட்ட அளவில் பள்ளிகளில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி பார்வையாளராக செல்லும் மாணவரிடம் ஒலிம்பிக் ஜோதியை வழங்கினார்.

பி்ன்னர் அவர் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இதையொட்டி முக்கிய வீதிகளின் வழியே சென்ற ஓட்டம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை அடைந்து முடிந்தது.

சதுரங்க போட்டி

இதையடுத்து அங்கு நடைபெற்ற சதுரங்க போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி (மானமதுரை), மாங்குடி (காரைக்குடி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை நகரசபை தலைவர் துரைஆனந்த், துணை தலைவர் கார்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்