மகாமாரியம்மன், சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

கோட்டூர் அருகே ஆதிச்சபுரத்தில் மகாமாரியம் மன், சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடக்கிறது.

Update: 2023-03-02 18:45 GMT

கோட்டூர்:

கோட்டூர் அருகே ஆதிச்சபுரத்தில் மகாமாரியம் மன், சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடக்கிறது.

மகாமாரியம்மன் கோவில்

கோட்டூர் அருகே ஆதிச்சபுரத்தில் இருந்து ராமபிரான் இலங்கைக்கு செல்லும் போது அவருடைய திருப்பாதங்கள் பட்ட தலமாகும். சித்தர்களுடைய புராணங்களிலே ஆதிஈசப்புரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சபுரத்தில் மேற்பாகத்தில் பெருமாள் கோவில், கிழக்கில் சிவன் கோவில், வடபாகத்தில் சுயம்பு அய்யனார் கோவில், தென் பாகத்தில் எல்லைக்காவல் தெய்வமாக மாகமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த மகா மாரியம்மன் கோவிலில் கிழக்குமுகத்தில் செல்லும் நதி அகஸ்தியர் முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட என்றும் புராணங்களில் அகஸ்திய நதி என்று கூறப்பட்டுள்ளது.

குடமுழுக்கு விழா

பல்வேறு சிறப்புகள் பெற்ற மகா மாரியம்மன் கோவில், சித்தி விநாயகர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவடைந்து குடமுழுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு கணபதி பூஜை, மாகலெட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, நவசக்தி அர்ச்சனை, கோபூசை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதை தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் மருந்து சாத்தப்பட்டு இன்று காலை 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் சித்தி விநாயகருக்கும், காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் மகா மாரியம்மனுக்கு குடமுழுக்கு விழா நடக்கிறது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அறங்காவலர்கள், பொதுநல கமிட்டி கிராமவாசிகள், ஊராட்சி மன்றத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்