சாராயம் கடத்தி வந்தவர் கைது
கே.வி.குப்பம் அருகே சாராயம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
கே.வி.குப்பம் அருகே கீழ்புதூர் ஆலமரம் பஸ் நிறுத்தத்தில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது மொபட்டில் கல்யாண பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 49) என்பவர் 2 லாரி டியூப்களில் 60 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து 60 லிட்டர் சாராயம், மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.