திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 33 பேர் கைது; 1,200 லிட்டர் சாராயம் பறிமுதல்

திருவாரூர் மாவட்டத்தில் சாராய வேட்டையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மேலும் 33 பேர் கைது செய்யப்பட்டு, 1,200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-18 19:00 GMT

திருவாரூர் மாவட்டத்தில் சாராய வேட்டையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மேலும் 33 பேர் கைது செய்யப்பட்டு, 1,200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

22 பேர் பலி

விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியானார்கள். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் சாராயம் விற்பனை செய்பவர்கள் மற்றும் வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக போலீசார் சாராய வேட்டையில் இறங்கி உள்ளனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் சாராயம் மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் என 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1,200 லிட்டர் சாராயம்

நேற்று சாராய வழக்கில் கைதானவர்களிடமிருந்து 1,200 லிட்டர் சாராயம் மற்றும் 140 வெளிமாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை கடந்த 4 நாட்களில் மட்டும் 163 பேர் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 4 நாட்களில் 4,200 லிட்டர் சாராயம் மற்றும் 400 வெளி மாநில மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் சாராயம் விற்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்தார்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவத்தன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சீதாராஜப்பையன்சாவடியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த கதிரவன் (வயது37), காளாச்சேரி பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற மோகன் (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 16 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்