ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வோம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வோம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Update: 2023-02-15 19:31 GMT

கும்பகோணம் பகுதியில் போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தனர். கடந்த சில தினங்களாக ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து வந்தனர். இந்தநிலையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கும்பகோணம் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் அனைவரும் 100 சதவீதம் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வோம் என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கும்பகோணம் துணை போலீஸ் சூபிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கும்பகோணம் சரகத்துக்கு உட்பட்ட போலீசார் அனைவரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வோம் என கையில் ஹெல்மெட்டுகளை ஏந்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்