எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-03-22 19:00 GMT

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டத்தை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. இதில் கரூர் மாவட்டத்தில் 2023-ம் கல்வி ஆண்டுக்கான இத்திட்டத்தின் செயலாக்க நிகழ்ச்சிகள் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொடக்கப்பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தரகம்பட்டி அருகே உள்ள முள்ளிப்பாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பா ராணி தலைமை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வைத்தார். இதில் அரசு ஆசிரியர் பயிற்சி மைய ஆசிரியர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் பள்ளி மாணவ- மாணவிகள், என்மேடை, ஆடல், பாடல், தனி பாடல்கள் உள்ளிட்ட தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தினர். மேலும் லக்கி வின்னர், விடுகதை போட்டி, பெற்றோர் கருத்துகள் ஆகிய தலைப்புகளில் பெற்றோர்களுக்கான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாணவர்களின் கற்றல் திறன்பரிசோதிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்