எண்ணும்,எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

நீடாமங்கலம் ஒன்றியத்தில் எண்ணும்,எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

Update: 2023-03-20 18:45 GMT

நீடாமங்கலம்:

தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீர்வு காண 2022-ம் ஆண்டு எண்ணும், எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது 2025-ம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவை எட்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் பெற வேண்டும் என்பதே. குழந்தைகள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படை கணித செயல்பாடுகளை செய்யும் திறன்களையும் வளர்த்தெடுப்பதில் எண்ணும், எழுத்தும் திட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

கற்றல் மற்றும் கற்பித்தலால் குழந்தைகளிடமும், ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பெற்றோர்களிடம் கொண்டு செல்ல எண்ணும், எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்வு நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 92 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களிடம் எண்ணும், எழுத்தும் கற்றல், கற்பித்தல் முறைகள், செயல்பாடுகள் மூலம் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியை மன்னார்குடி ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கலைச்செல்வி, வட்டார கல்வி அலுவலர்கள் சம்பத், முத்தமிழன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா, ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்