ஆனி மாதத்தின் கடைசி நாள்; திருச்செந்தூரில் இன்று அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், தமிழ் மாதமான ஆனி மாதத்தின் கடைசி நாள் என்பதாலும் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கடலில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையோரம் உள்ள நாழிக்கிணற்றிலும் வரிசையில் நின்று குளித்தனர். தங்கள் குடும்பத்தோடு வந்திருந்த பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.