காரைக்குடி
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான சிவகங்கை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கபடி போட்டியில் முதலிடம் பெற்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனிடம் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனர். சாதனை படைத்த மாணவிகள் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் காரைக்குடி நகர மன்ற தலைவர் முத்துத்துரையை சந்தித்தனர். கபடி போட்டியில் சாதனை படைத்து காரைக்குடி நகருக்கு பெருமை சேர்த்த மாணவிகளை நகர மன்ற தலைவர் முத்துத்துரை பாராட்டி மேலும் பல்வேறு சாதனைகள் படைக்க வாழ்த்தினார்.