கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில்ஐப்பசி திருக்கல்யாண திருவிழாகால்நாட்டு நிகழ்ச்சி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளைமறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் சண்முகராஜ், திருப்பதி ராஜா நிறுத்திய லட்சுமி என்ற சுதா, ரவீந்திரன், கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.