குத்து சண்டை போட்டியில் கரூா் மாணவா்கள் பதக்கங்கள் வென்று சாதனை

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கரூா் மாணவா்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-06-02 18:57 GMT

சென்னையில் கடந்த மே மாதம் மாநில அளவிலான குத்து சண்டை போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் சார்பில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 36 ஜூனியர் மற்றும் சீனியர் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினார்கள். இதில் 3 தங்கம், 7 வெள்ளி, 8 வெங்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

மேலும் மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் சந்திரகாந்த், மாணவி லோக ஸ்ரீ ஆகியோர் அடுத்த மாதம் (ஜூலை) பஞ்சாப்பில் நடைபெறும் சீனியர் பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று விளையாட தேர்வாகி உள்ளனர்.

இதேபோல் வருகிற ஆகஸ்டு மாதம் ராஞ்சி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள குத்துச்சண்டை போட்டியில் ஜூனியர் பிரிவில் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளனர்.

மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு விளையாடி தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை அமெச்சூர் கிக் பாக்சிங் தலைவர் மணியன், செயலாளர் ரவிக்குமார், பயிற்சியாளர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்