கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்
கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிவகாசி,
சிவகாசி நகரின் மையப்பகுதியில் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 27-ந்தேதி கும்பாபிஷேக பணி தொடங்கப்பட்டது. அன்று காலை 5 மணிக்கு விஷேச பூஜைகள் நடந்தது. பின்னர் 28-ந்தேதியும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 7.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் முன்பு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.