கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Update: 2022-08-08 14:59 GMT

வேளாங்கண்ணி

நினைவுநாளையொட்டி கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அமைதி ஊர்வலமும் நடந்தது.

திருக்குவளை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருக்குவளையில் நாகை மாவட்ட பொறுப்பாளர் (தெற்கு) கவுதமன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் அஞ்சுகம் முத்துவேல் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி முக்கிய வீதி வழியாக வந்து கருணாநிதி வீட்டை வந்தடைந்தது. அங்குள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாைத செலுத்தப்பட்டது. இதில் கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், செயற்குழு உறுப்பினர் இலமேகநாதன், தாட்கோ நிறுவன தலைவர் மதிவாணன், கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வராணிஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா, திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

நாகை

நாகையில் உள்ள தி.மு.க. அலுவலகம் அருகே கருணாநிதி நினைவுநாளையொட்டி மாவட்ட, நகர தி.மு.க. சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். நாகை நகர மன்ற தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். தொடர்ந்து பழைய பஸ் நிலையம், கோட்டைவாசல்படி, நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவில், வெளிப்பாளையம் உள்ளிட்ட அனைத்து வார்டுகளிலும் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வேதாரண்யம்

வேதாரண்யம் நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் புகழேந்தி, நகர துணை செயலாளர் ராஜாஜீ, நகர மன்ற துணைத்தலைவர் மங்களநாயகி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் வேதாரண்யத்தை அடுத்த ஆதனூரில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் தலைமையில் தி.மு.க. வினர் கருணாநிதி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வேதாரண்யம் கிளையின் சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்