செட்டிநாட்டு மாளிகைகளை பாதுகாக்க வேண்டும்-மத்திய கலாசார துறை மந்திரிக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம்

அறிவியல் தொழில்நுட்பத்தோடும், பாரம்பரிய சிறப்புகளோடும் விளங்கும் செட்டிநாட்டு மாளிகைகளை பாதுகாக்க வேண்டும் என மத்திய கலாசார துறை மந்திரிக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-04-09 18:45 GMT

காரைக்குடி

அறிவியல் தொழில்நுட்பத்தோடும், பாரம்பரிய சிறப்புகளோடும் விளங்கும் செட்டிநாட்டு மாளிகைகளை பாதுகாக்க வேண்டும் என மத்திய கலாசார துறை மந்திரிக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

செட்டிநாடு மாளிகை

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மத்திய கலாசார துறை மந்திரி கிஷான்ரெட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை தொகுதியில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செட்டிநாட்டு மாளிகைகள் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். 1850-1950-ம் ஆண்டுகளுக்குக்கிடையில் அழகிய கலை வேலைப்பாடுகளுடன், பாரம்பரிய சிறப்புகளுடன் அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீனத்துவத்தை தழுவிய பார்வைகளோடு இவை திகழ்கின்றன.

எனினும் எல்லா குடும்பத்தினரும் பாரம்பரியமிக்க இந்த மாளிகைகளை பராமரித்து நிர்வகிப்பதற்கான போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால் பாதி மாளிகைகள் பாழடைந்து இருப்பதாக உள்ளூர் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த கட்டிடங்களுக்கு வழக்கமான பராமரிப்பு தேவைப்படுகிறது. ஆனால் இதனை சீரமைக்க ஆகும் செலவுகள் அதிகம் என்பதாலும், இது ஒருமுறை மட்டுமே ஆகும் செலவுகள் அல்ல என்பதாலும் இவற்றை பாதுகாப்பது கடினமான பணியாக உள்ளது.

சுற்றுலா பயணிகள்

செட்டிநாட்டு மாளிகைகளில் 10 சதவீதம் மட்டுமே இதுவரை சுற்றுலா பயணிகளுக்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 30 சதவீதம் மாளிகைகள் பாழடைந்த நிலையிலேயே உள்ளது. மீதமுள்ள 60 சதவீதம் மாளிகைகளின் பெருமையை மீண்டும் வெளிக்கொணர வேண்டியது மிகவும் அவசியமாகிறது. செட்டிநாடு புனித யாத்திரை, சுவையான உணவு மற்றும் பூர்வீக கட்டிடக்கலைக்கு குறிப்பிடத்தக்க இடமாக விளங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்ற முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகிறது. தேசிய கலாசார பாரம்பரியத்தின் மதிப்புகளை பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் சுற்றுலா மேம்பாடு ஆகியவற்றிற்கு இடையேயான நெருங்கிய உறவானது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த உறவை திறம்பட பயன்படுத்த வேண்டும்.

அறிவியல் தொழில்நுட்பத்தோடும், பாரம்பரிய சிறப்புகளோடும் விளங்கும் செட்டிநாட்டு மாளிகைகளை பாதுகாக்க வேண்டும் என மத்திய கலாசார துறை மந்திரிக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

செட்டிநாடு கலாசார பாரம்பரியத்தை புரிந்து கொள்ள ஒரு நிபுணர் குழுவை அமைக்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகிறேன். இந்த குழுவில் வரலாற்று ஆசிரியர்கள், கட்டிடக்கலைஞர்கள் மற்றும் காப்பாளர்கள் இருக்க வேண்டும். பராமரிப்பு தேவைப்படும் மாளிகைகளை கண்டறிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பண்டைய கலாசார பாரம்பரியத்தை பாதுகாத்து மேம்படுத்திட அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாளிகைகளை தொடர்ந்து பராமரிப்பதற்காக சமூக அடிப்படையிலான தீர்வுகள் குறித்து ஆலோசிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இவற்றை அருங்காட்சியகங்களாகவோ அல்லது பாரம்பரிய இல்லங்களாகவோ மாற்றுவதும் இத்தீர்வில் உள்ளடக்கியதாகும். நாட்டின் வளமான கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க அரசு அர்ப்பணிப்புடன் பங்களிப்பினை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்