காரியாபட்டி யூனியன் அலுவலர்கள் தர்ணா

காரியாபட்டி யூனியன் அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-28 19:02 GMT

காரியாபட்டி,

காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்களிடம் சிலர் நாங்கள் சொல்லும் நபர்களை தான் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கூறி அரசு பணி செய்ய விடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி காரியாபட்டி யூனியன் அலுவலக அலுவலர்கள் அனைவரும் ஒன்று திரண்டு யூனியன் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் தகராறு செய்ததாக கூறப்படும் நபர்கள் மீது போலீசில் புகார் செய்யப்படும் என்று கூறியவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமாரிடம் அலுவலகத்தில் வந்து தகராறு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்