முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு கமல்ஹாசன் பாராட்டு

முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-25 16:39 GMT

சென்னை,

முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது;

இந்திய மாநிலங்களிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த சாதனையை சாத்தியமாக்கிய தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்