வீரதீர செயல்புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது

மாவட்டத்தில் வீர தீர செயல்புரிந்த பெண்கள் கல்பனாசாவ்லா விருது பெற வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்

Update: 2023-06-24 18:45 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திரதின விழாவில்

தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் வீரதீர செயல்புரிந்த மகளிர் ஒருவருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி 2023-ம் ஆண்டிற்கு வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு கல்பனா சாவ்லா விருது, இவ்வாண்டு நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. தானாக முன்வந்து தைரியத்துடனும், துணிச்சலுடனும் பாராட்டத்தக்க வகையில் சேவை புரிந்தவர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள், https://awards.tn.gov.in/என்ற இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். நேரடியாக விண்ணப்பிப்பவர்கள், உரிய ஆவணங்களுடன் வருகிற 28-ந் தேதிக்குள்(புதன்கிழமை), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கலாம். இது தொடர்பான முழு விவரங்களையும், மேற்கண்ட இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். எனவே, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவ்விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள்(பெண்கள் மட்டும்), உரிய தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாற அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்