பட்டுக்கோட்டையில் நகைக்கடைக்கு 'சீல்'

பட்டுக்கோட்டையில் நகைக்கடைக்கு ‘சீல்’

Update: 2023-01-29 19:47 GMT

பட்டுக்கோட்டையில் நகைக்கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டு, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகைக்கடையை முற்றுகையிட முயற்சி

பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் நகைக்கடை உள்ளது. இந்த நகைக் கடையில் தவணை முறையில் பணம் செலுத்தினால் சலுகை அடிப்படையில் நகையும், சீட்டுக்கு பணம் கட்டினால் குலுக்கல் முறையில் நகை வழங்குவதாகவும் அறிவித்து இருந்தனர். இதையொட்டி பட்டுக்கோட்டை நகரை சேர்ந்தவர்களும், சுற்றுப்புற கிராமங்களில் உள்ளவர்களும், ஆண்கள், பெண்கள், நூற்றுக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் தவணை முறையில் பணம் செலுத்தியும், சீட்டுக்கு பணம் கட்டியும் வந்தார்கள். பலர் இந்த கடையில் நகைகளை அடகு வைத்தும் இருந்தனர். ஆனால் குறிப்பிட்ட கெடு முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் நகையோ, பணமோ கொடுக்காததால் தினந்தோறும் அந்த நகைக்கடைக்கு வந்து அலைந்தனர். திடீரென்று அந்த நகைக்கடையை பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். மேலும் பட்டுக்கோட்டை நகர போலீசிலும் புகார் செய்தனர். விசாரணையில் நகைக்கடையை பூட்டிவிட்டு அதன் நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டதாக தெரியவந்தது.

2 பேர் கைது

இந்தநிலையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பட்டுக்கோட்டை நகர போலீசில் மீண்டும் புகார் செய்தனர். இது தொடர்பாக நகைக்கடை மேனேஜர் வாள்அமர் கோட்டையை சேர்ந்த ராஜவர்மன் (வயது 39), மதுக்கூரைச்ேசர்ந்த கேஷியர் வீரமணி (24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'சீல்' வைப்பு

அதனை தொடர்ந்து நேற்று பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் உள்ள அந்த நகைக்கடைக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரிதிவிராஜ் சவுகான், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் தாசில்தார் (பொறுப்பு) தரணிகா, வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் 'சீல்' வைத்தனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்