செஞ்சியில்2 வீடுகளில் நகை-பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

செஞ்சியில் 2 வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையைடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-24 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சி சிறுகடம்பூர் ரங்கசாமி தெருவை சேர்ந்தவர் மணி மகன் இளங்கோவன் (வயது 35). இவர் கடந்த 22-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் குடும்பத்துடன் நேற்று அதிகாலை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5¼ பவுன் நகைகள், வெள்ளி பொருட்களை காணவில்லை. இளங்கோவன் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதேபோல் முனுசாமி தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் வினோத் (35) என்பவர் நேற்று முன் தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான மேல்ஒலக்கூர் சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், 80 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் நள்ளிரவில் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்த தனித்தனி புகார்களின்பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வீடுகளில் ரூ.2 லட்சம் மதிப்பிள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்