மாவட்டத்தில் 7 தாலுகாக்களில் ஜமாபந்திநாளை தொடங்குகிறது

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாக்களில் நாளை தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது.

Update: 2023-05-21 18:45 GMT

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜமாபந்தி

தர்மபுரி மாவட்டத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) 7 தாலுகாக்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கி வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. தர்மபுரி தாலுகா தர்மபுரி உள்வட்டத்தில் நாளையும், கிருஷ்ணாபுரம் உள்வட்டத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) யும் நடக்கிறது.

பென்னாகரம் தாலுகாவில் உள் வட்ட வாரியாக பென்னாகரத்தில் நாளையும், பெரும்பாலையில் நாளை மறுநாளும், சுஞ்சல்நத்தத்தில் 25-ந் தேதியும், பாப்பாரப்பட்டியில் 26-ந் தேதியும் ஜமாபந்தி நடக்கிறது. நல்லம்பள்ளியில் நாளையும், பாளையத்தில் நாளை மறுநாளும், இண்டூரில் 25-ந் தேதியும் நடக்கிறது.

பாலக்கோடு தாலுகாவில் உள்வட்ட வாரியாக புலிக்கரையில் நாளையும், பாலக்கோட்டில் நாளை மறுநாளும், மாரண்டஅள்ளியில் 25-ந் தேதியும், வெள்ளிச்சந்தையில் 26-ந் தேதியும் ஜமாபந்தி நடக்கிறது. காரிமங்கலத்தில் நாளையும், கம்பைநல்லூரில் நாளை மறுநாளும், பெரியானஅள்ளியில் 25-ந் தேதியும் ஜமாபந்தி நடக்கிறது.

அரூர்- பொம்மிடி

அரூரில் நாளையும், மொரப்பூரில் நாளை மறுநாளும், தீர்த்தமலையில் 25-ந் தேதி மற்றும் 26-ந் தேதியும் ஜமாபந்தி நடக்கிறது. இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டியில் நாளையும், பொம்மிடியில் நாளை மறுநாளும்,, கடத்தூரில் 25-ந் தேதியும், தென்கரைகோட்டையில் 26-ந் தேதியும் ஜமாபந்தி நடக்கிறது.

ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் காலை முதல் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும். எனவே பொதுமக்கள் தங்கள் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களையும் ஜமாபந்தி நாளில் அலுவலரிடம் உரிய ஆவண ஆதாரங்களுடன் அளித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்