சட்டப்படி சந்திப்போம்: ஐ.டி ரெய்டு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் கையெழுத்து இயக்கத்திற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் கையெழுத்தைப் பெற்றார்.

Update: 2023-11-03 07:09 GMT

சென்னை,

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் கையெழுத்து இயக்கத்திற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து அவர்களிடம் கையெழுத்தைப் பெற்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; "நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்பேன். மத்தியில் ஆளும் பாஜகவின் அணிகளாக ஐ.டி, இ.டி போன்ற விசாரணை அமைப்புகள் உள்ளன. இவற்றை எல்லாம்  சட்டப்படி சந்திப்போம்." இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்