நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-10-09 19:30 GMT

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு அருகே ஜல்லிப்பட்டி பிரிவு உள்ளது. இந்த பிரிவில் இருந்து செம்பட்டி, தருமத்துப்பட்டி, கன்னிவாடி, மூலச்சத்திரம் வழியாக ஒட்டன்சத்திரம், தாராபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஜல்லிப்பட்டி பிரிவு பகுதியில் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையையும், ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலையையும் இணைக்கும் வகையில் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த சிமெண்டு கர்டர்களை பொருத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நவீன கிரேன் மூலம் சிமெண்டு கர்டர்கள் பொருத்தப்படுகிறது.


இதற்கிடையே திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் ஜல்லிப்பட்டி பிரிவு பகுதியை கடந்து செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைத்துள்ளனர். ஆனால் மேம்பாலத்தில் இறக்கத்தில் அதிவேகமாக வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஆனால் மேம்பால பணிகள் குறித்து அறிவிப்பு பலகையோ, எச்சரிக்கை பலகையோ வைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே மேம்பால பணிகள் குறித்து அறிவிப்பு பலகை மற்றும் ஒளிரும் விளக்குகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்