கிராசிங் ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்

கிராசிங் ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-06-17 18:34 GMT

கரூர் -திருச்சி இடையே ெரயில் பாதை அமைக்கப்பட்டு, அதில் சரக்கு மற்றும் பயணிகள் ெரயில் பல்வேறு மார்க்கங்களுக்கு சென்று வருகிறது. இந்த ெரயில் பாதையில் அமைந்துள்ள லாலாபேட்டை ெரயில் நிலையத்தில் ெரயில்களை நிறுத்தி பயணிகளை ஏற்று இறக்கி விடும்ேபாது மறுபுறம் ெரயில் வந்தால் மற்றொரு கிராசிங் ெரயில் பாதையில் நின்று செல்வது வழக்கமாகும். தற்போது மாற்று ெரயில்களுக்கு வழி விடும் வகையில் கிராசிங் தண்டவாளங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் இந்த கிராசிங் தண்டவாளத்தில் அதிக எண்ணிக்கை கொண்ட ெரயில்ெபட்டிகள் வரும்ேபாது நிறுத்த முடியாத சூழ்நிலை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அதிக பெட்டிகளுடன் வரும் ெரயில்களை நிறுத்தி மற்ற ெரயில்களுக்கு வழி விடும் வகையில் நீளமான கிராசிங் தண்டவாளம் நீட்டிப்பு செய்வதற்கு ெரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று முதல் ெரயில்வே துறை பணியாளர்கள் பொக்லைன் எந்திர உதவியுடன் கிராசிங் தண்டவாளம் நீட்டிப்பு பணிக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்