கிணத்துக்கடவு பகுதியில் ஆய்வு:புகையிலை விற்ற 4 கடைகளுக்கு அபராதம்-அதிகாரிகள் நடவடிக்கை

கிணத்துக்கடவு பகுதியில் ஆய்வு:புகையிலை விற்ற 4 கடைகளுக்கு அபராதம்-அதிகாரிகள் நடவடிக்கை

Update: 2022-11-26 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிப் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சித்ரா தலைமையில், சுகாதார மேற்பார்வை யாளர் ராஜவேல் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், சரவணக்குமார், செல்வம், கார்த்திகேயன் அடங்கிய குழுவினர் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செங்குட்டுப்பாளையம், கோவில்பாளையம், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், பேக்கரிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்