பள்ளிபாளையத்தில் சேதமடைந்த நுழைவு பாலத்தை உதவி கலெக்டர் ஆய்வு

பள்ளிபாளையத்தில் சேதமடைந்த நுழைவு பாலத்தை உதவி கலெக்டர் ஆய்வு

Update: 2022-06-20 18:33 GMT

பள்ளிபாளையம்:

குமாரபாளையம் தாலுகா பள்ளிபாளையம் சாலையில் காவிரி ஆர்.எஸ். பகுதியில் உள்ள நுழைவு பாலம் மழைநீர் காரணமாக சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி தலைமையில் அதிகாரிகள் நுழைவுபாலம் பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு போக்குவரத்திற்கு மாற்று வழி குறித்து அங்கிருந்தவர்களிடம் உதவி கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் மாற்று வழி ஏற்பாடு குறித்து அனைத்து துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த ஆய்வின்போது தாசில்தார் ்தமிழரசி, வருவாய் அலுவலர் கார்த்திகா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்