எழும்பூர்- திருச்சி வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு -தெற்கு ரெயில்வே தகவல்

சென்னை எழும்பூர் - விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை 2025-26-ம் நிதியாண்டுக்குள் 130 கி.மீ வேகத்தில் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

Update: 2023-11-24 22:37 GMT

சென்னை,

சென்னை எழும்பூர் - விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை 2025-26-ம் நிதியாண்டுக்குள் 130 கி.மீ வேகத்தில் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயின் கீழ் உள்ள ஜோலார்பேட்டை - சேலம் - கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களின் வேகம் 2023-24-ம் நிதியாண்டுக்குள் அதாவது 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூர் - விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்கள் 2025-2026-ம் நிதியாண்டுக்குள் 130 கி.மீ வேகத்திலும், திருச்சி- திண்டுக்கல் - மதுரை - நெல்லை - நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களின் வேகம் 2026 - 2027-ம் நிதியாண்டுக்குள்ளும் மணிக்கு 130 கி.மீ வேகத்துக்கு உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மேம்படுத்தும் பணி

இதேபோல கரூர் - திண்டுக்கல், மயிலாடுதுறை - திருவாரூர், ஆரல்வாய்மொழி - நான்குநேரி - மேலப்பாளையம், மதுரை - திருமங்கலம் இடையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்கள் வேகம் 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் 1,225 கி.மீ ரெயில் தண்டவாளம் மறுசீரமைப்பு பணி முடிக்க இலக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெயிலின் வேகத்தை அதிகரிப்பது போல பாலங்களை வலுப்படுத்தல், தடுப்புச்சுவர்கள் அமைப்பது, தானியங்கி சிக்னல் அமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்