ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது

Update: 2022-11-03 08:22 GMT

 பென்னாகரம்,

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதனால் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை, பிலிகுண்டுலு, அஞ்செட்டி உள்பட தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் இன்று  20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

மெயின்அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து . மெயின் அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்