விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு பக்கம் பண பலமும், ஆட்சி பலமும் சூழ்ந்துள்ளது: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு ஆபத்து வந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Update: 2024-07-04 16:42 GMT

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், விக்கிரவாண்டியில் பாமக சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது;

"தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு ஆபத்து வந்துள்ளது. திமுகவிற்கு சமூக நீதி பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. தேர்தல் வந்தால் பொய் வாக்குறுதிகளை கூறுவார்கள். பின்னர் அதை மறந்துவிடுவார்கள். திமுக என்றால் பொய் வாக்குறுதி அளிப்பவர்கள். 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தானால் தமிழ்நாட்டில் திமுக என்ற கட்சியே இருக்காது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு பக்கம் பண பலமும், ஆட்சி பலமும் சூழ்ந்துள்ளது. `பாமக கூட்டணி பலத்தையே நம்பி இந்த தேர்தலை எதிர்கொள்கிறது." இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்