தூத்துக்குடி-ஆழ்வார்திருநகரியில் உலக யோகா தினம்

தூத்துக்குடி-ஆழ்வார்திருநகரியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.;

Update:2023-06-22 00:15 IST

முத்துநகர் கடற்கரை

தூத்துக்குடி இந்திய தேசிய மாணவர் படையின் கடற்படை மற்றும் தரைப்படை சார்பில் முத்துநகர் கடற்கரையில் உலக யோகா தினம் நடந்தது. நிகழ்ச்சியில் ஆசிரியர் சண்முகப் பிரியா யோகா நிகழ்ச்சியை நடத்தினார். இதில், சூரிய நமஸ்காரம், கருடாசனம், சர்வாங்காசனம் உள்ளிட்ட 32 வகையான ஆசனங்கள் செய்து காண்பித்து பயிற்சி அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கடற்படை அதிகாரி கணேஷ்பிள்ளை, தரைப்படை அதிகாரி பிரதோஸ், பள்ளி கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர்கள் வெலிங்டன், சரவணக்குமார், ஜீசஸ் ஆல்பன், சொர்ணகுமார், சிலுவை, ஹெலன் ப்ளோரா மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆழ்வார்திருநகரி

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளியில் செயலாளர் ஆதிநாதன், தலைமை ஆசிரியர் ராமசாமி ஆகியோர் ஆலோசனையின் பேரில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர் சங்கர் ராமன் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராஜா யோகாசன பயிற்சியை தொடங்கி வைத்தார்.

பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி வள்ளி குட்டி நன்றி கூறினார். தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

இதேபோன்று, தூத்துக்குடி தெற்கு மண்டல பா.ஜ.க. சார்பில் முள்ளக்காடு விநாயகர் கோவில் திடலில் விளையாட்டுப் பிரிவு மண்டல தலைவர் பிரபாகர் தலைமையில், உலக யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக உமரி சத்தியசீலன் கலந்து கொண்டார். தெற்கு மண்டல தலைவர் மாதவன், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம் மற்றும் பொறுப்பாளர்கள், கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்