டி.என்.பாளையம் பகுதியில்சூறாவளிக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்

டி.என்.பாளையம் பகுதியில் சூறாவளிக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன.

Update: 2023-03-20 22:09 GMT

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர், புஞ்சைதுறையம்பாளையம், கள்ளிப்பட்டி, கொண்டையம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.

இந்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் பாஸ்கரன், நஞ்சைதுறையம்பாளையம் பகுதியில் ராஜமாணிக்கம் ஆகியோரது தோட்டங்கள் உள்பட பல்வேறு தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, 'சூறாவளிக்காற்று வீசியதில் அறுவடைக்கு தயாராக இருந்த கதலி, செவ்வாழை என ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்