தமிழகத்தில் சென்னை உட்பட 14 இடங்களில் வெயில் சதம்..!

சென்னை, மீனம்பாக்கத்தில் இன்று அதிகபட்சமாக 108.86 டிகிரி வெயில் , நுங்கம்பாக்கத்தில் 107.24 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

Update: 2023-05-16 14:38 GMT

சென்னை,

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சில நிலையில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும், சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு வெப்பம் கொளுத்தும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 14 இடங்களில் சதம் அடித்துள்ளது. சென்னை, மீனம்பாக்கத்தில் இன்று அதிகபட்சமாக 108.86 டிகிரி வெயில் , நுங்கம்பாக்கத்தில் 107.24 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

சென்னை 109, கடலூர் - 104 , தர்மபுரி - 100.4 , ஈரோடு - 105.8 , கரூர் - 104 , மதுரை - 105.44 , நாகை - 103.28 , நாமக்கல் - 101.3 , சேலம் - 102.92 , தஞ்சை - 102.2 , திருப்பத்தூர் - 101.84 , திருச்சி - 104.54 , திருத்தணி - 107.24 வேலூர் - 107.96 டிகிரி ஃபேரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்