மதுரையில் திடீரென வெளுத்து வாங்கிய மழை...!

மதுரையின் நகர் பகுதிகளில் இன்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது.

Update: 2022-11-28 16:22 GMT

மதுரை,

மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவ்வப்போது மழை பெய்தது. அதன் பின்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் இன்று இரவு 8 மணியளவில் மதுரை நகர் பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அதன்பின்னரும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவு நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

இதுபோல், தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்